App & Website மூலம் புகார் பதிவு செய்வது மற்றும் அதன் நிலையைப் பின்தொடர்வது – எளிய படிகள்
Grievance App-ஐ பதிவிறக்கம் செய்து “புகார் பதிவு” செய்யுங்கள். சில நிமிடங்களில் அரசாங்கத்துக்கு சென்றடையும்.
ஆப் பதிவிறக்கGrievance Portal வழியாக உங்கள் புகாரை பதிவு செய்யுங்கள். படிவத்தை நிரப்பி Submit செய்தால் போதும்.
இணையத்தில் புகார்உங்கள் புகார் எங்கு உள்ளது, எந்த அதிகாரியிடம் உள்ளது என்பதை Track Complaint வசதியில் எளிதாக பார்க்கலாம்.
புகார் நிலை பார்க்க
இனி நீண்ட வரிசையில் நிற்கவோ அலுவலகங்களுக்கு செல்வதற்கோ தேவையில்லை.
உங்கள் புகாரை ஆன்லைனில் எளிதாக பதிவு செய்து, எப்போதும் எங்கு இருந்தாலும் அதன் நிலையைப் பின்தொடரலாம்.
எளிமையானது, வெளிப்படையானது மற்றும் அனைவருக்கும் எளிதில் பயன்படுத்தக்கூடியது.
பொருட்கள் அல்லது சேவைகளை வாங்கி பயன்படுத்தும் ஒவ்வொருவரும் நுகர்வோராக கருதப்படுவர்.
பணம் கொடுத்து அல்லது அதற்கான வாக்குறுதி அளித்து, எந்தவொரு பொருளையும் அல்லது சேவையையும் தன்னுடைய சொந்த உபயோகத்திற்காக வாங்கும் அல்லது பயன்படுத்தும் நபர் நுகர்வோர் ஆவார்.
உதாரணம்: உணவு, நீர், உடை, வீடு, கல்வி, மருத்துவம்.
• சொந்த பயன்பாட்டிற்காக வாங்குபவர்
• சேவையை பயன்படுத்தும் தனிநபர்
• வணிக நோக்கமின்றி பயன்படுத்துபவர்
தினசரி வாழ்க்கையில் பணம் கொடுத்து பொருட்கள் மற்றும் சேவைகளைப் பெறும் அனைவரும் நுகர்வோர் என்பவர் நம்மில் ஒவ்வொருவரும்
உடலுக்கும் உயிருக்கும் ஆபத்து விளைவிக்கக்கூடிய பொருட்கள், உற்பத்தி செய்யும் முறைகள் மற்றும் சேவைகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ளும் உரிமை.
போலியான விளம்பரங்கள் மற்றும் ஏமாற்று வித்தைகளிலிருந்து பாதுகாத்துக கொள்ளவும், சரியான வகையில் தேவையான பொருளையோ, சேவைகளையோ தேர்வு செய்ய போதுமான மற்றும் முழுமையான தகவல் பெறும் உரிமை.
தனக்கு தேவையான பொருள் அல்லது சேவைகளை தேர்ந்தெடுத்துக் கொள்ளும் உரிமை.
பொருட்கள் மற்றும் சேவைகளின் தரத்தை நிர்ணயிக்கும் பொழுதும், அரசு கொள்கைகளை உருவாக்கி செயல்படுத்தும்பொழுதும் நுகர்வோர் கருத்துகளை எடுத்துக்கூறும் உரிமை.
தரமற்ற பொருட்கள் அல்லது திருப்தியற்ற சேவைகள் காரணமாக ஏற்படும் இழப்புகளுக்கு நியாயமாக நட்ட ஈடு பெறுவதற்கான உரிமை.
விழிப்படைந்த நுகர்வோராக இருப்பதற்கு தேவையான அறிவையும், திறமையையும் பெறும் உரிமை.
இனி அலுவலகங்களுக்கு சென்று நீண்ட வரிசையில் நிற்க வேண்டிய அவசியமில்லை. Grievance App மூலம் அரசுத் துறைகளில் தொடர்பான உங்கள் புகார்களை எப்போது வேண்டுமானாலும், எங்கிருந்தும் உங்கள் கைபேசியிலிருந்தே பதிவு செய்யலாம்.
உங்கள் புகார் பதிவானவுடன், தொடர்ந்து துரத்திச் செல்ல தேவையில்லை. உடனடி அறிவிப்புகள் மூலம் உங்கள் புகாரின் நிலையை படிப்படியாகக் கண்காணிக்கலாம்.
மக்களுக்காகவே வடிவமைக்கப்பட்ட இந்த செயலி எளிமையானது, பல மொழிகளில் கிடைக்கிறது, அனைத்து வயதினரும் எளிதில் பயன்படுத்தக்கூடியது. நீங்கள் நகரத்தில் இருந்தாலும், கிராமத்தில் இருந்தாலும் — உதவி உங்கள் விரலில் கிடைக்கும்.